--- --:--:-- --

காரைக்குடியில் தாலுகா அலுவலகத்தை திருநங்கைகள் முற்றுகை – போராட்டம் நடத்தியதால் பரபரப்பு..

356cbc3f-7592-4b52-bdf9-15a42a78ff2a

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் வாடகை வீடுகளில் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.

 

இவர்களுக்கு நிரந்தரமான வீட்டு மனை கேட்டு, காரைக்குடி தாலுகா வீட்டு வசதி வாரிய பிரிவில் தங்களுக்கு பட்டா வழங்கி வீடு கட்டி தர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

 

இந்தநிலையில் 4 ஆண்டுகளுக்கு மேலாக காலம் தாழ்த்தி வந்ததால், திருநங்கைகள் சங்கத் தலைவி அனிதா நாயக் தலைமையில், இன்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி தாலுகா அலுவலகம் முன்பு திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திருநங்கைகள் கூறுகையில், காரைக்குடி நகர் பகுதியில் 30 பேர் வசித்து வருகிறோம். எங்களது வீட்டிலேயே எங்களை அனுமதிப்பதில்லை. நாங்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்குவதற்கும் எங்களுக்கு போதிய வருமானம் இல்லை. வீட்டுமனை ஒதுக்கி, அரசே எங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும்.

 

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திருநங்கைகளுக்கு இடம் ஒதுக்கி வீடுகளை கட்டித் தந்துள்ளார்கள். ஆனால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மட்டும் இந்தப் பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டே இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு வழங்கியுள்ளோம் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon