--- --:--:-- --

பத்தாம் வகுப்பு கணித தேர்வு தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

5

த்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் குளறுபடியான கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும் சலுகைகள் வழங்க வாய்ப்பில்லை என்றும் தேர்வுத் துறை தெரிவித்திருக்கிறது. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் இரண்டு கேள்விகள் பழைய பாடத்திட்டத்தில் இருந்தும், ஒரு கேள்வி நடத்தப்படாத பாடத்திட்டத்தில் இருந்தும் கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது.

 

இதையடுத்து தனியார் மற்றும் அரசு பள்ளி ஆசிரியை உட்பட வல்லுனர்களை அழைத்து தேர்வுத்துறை வினாத்தாள் குறித்து கருத்து கேட்டது. அதில் பழைய படத்திலிருந்து தவறான கேள்விகள் இடம் பெறவில்லை என்றும் சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon