அண்ணா பல்கலை.யில் மேலும் 3 பேருக்கு கொரோனா..!
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் மூன்று பேருக்கு கொரொனா இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மூன்று பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கொரொனா நோய்க்கு சிகிச்சை அளிக்க தனித்த மருத்துவ குழு பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.






