நாளை பத்திரப்பதிவு செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு..!
நாளை (31.10.2025) பத்திரப்பதிவு செய்வோருக்கு பதிவுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பத்திரப்பதிவுத் துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான நாளை (31.10.2025) கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான நாளை (31.10.2025) அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும்100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு வில்லைகளுடன் ஏற்கெனவே வழங்கப்படும்.
மேலும் கூடுதலாக 4 12 தட்கல் முன்பதிவு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.






