82-வது பிறந்தநாள்.. கேக் வெட்டி கொண்டாடிய இளையராஜா!
இசைஞானி இளையராஜா தனது 82-வது பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடினார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ஸ்டூடியோவில் மகன் கார்த்திக் ராஜா மற்றும் இசைக்குழுவினருடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது அவரை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.






