யூடியூப் மூலம் வருமானம் ஈட்டினால் வரி கட்ட வேண்டும்..!
சமூக வலைதளங்களின் மூலம் வருமானம் ஈட்டினால் 10 விழுக்காடு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்ற புதிய விதி நடைமுறைக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
தனிநபர் வருமானம் ஊதியம் வாங்குபவர் நிறுவனங்கள் என ஒவ்வொரு வகையான வருமானத்துக்கும் வரி செலுத்தவேண்டும். அந்த வகையில் சமூக வலைதளங்களின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 10 விழுக்காடு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்று புதிய விதி நடைமுறைக்கு வந்துள்ளது.





