எடப்பாடி தனித்துப் போட்டியிட்டால் சேலத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாது..!
இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தனித்த போட்டியிட்டால் டெபாசிட் இழக்கும் என்று கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு கூட்டம் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர் எடப்பாடி பழனிச்சாமி பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும் பொழுது அவரை ஒப்பந்ததாரர்கள் மட்டுமே சந்திக்க முடிந்ததாக கூறினார். எடப்பாடி பழனிச்சாமி தனித்து போட்டியிட்டால் சேலத்தில் கூட டெபாசிட் பெற முடியாது என்று வைத்திலிங்கம் கடுமையாக விமர்சித்தார்.






