--- --:--:-- --

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு சிறை..!

10

புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டி பல்வேறு விபத்தில் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வரும் நிலையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டினால் அவர்களின் பெற்றோர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் ரூபாய் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகம், கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் சிறுவர்கள் செய்யும் அட்டகாசங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ரீல்ஸ் வீடியோ செய்வதற்காக சாலையில் பைக் ஓட்டி சர்கஸ் செய்வதும் நண்பர்களுடன் சேர்ந்து பொது இடத்தில் பைக் ரேஸ் நடத்துவதுமான செயல்கள் அதிகரித்து வருவதால் சாலைகளில் செல்லும் அப்பாவி பொதுமக்களும் பாதிப்பு ஏற்பட்டு சில நேரங்களில் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

 

இத்தனை வருடமா விபத்து நிகழ்ந்து வரும் போதிலும் சிறுவர்களை பெற்றோர்கள் பைக் ஓட்டு அனுமதிப்பதுதான் வேதனையாக உள்ளது. எனவே சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon