--- --:--:-- --

தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது..!

5

திருச்சி மாவட்டம், மன்னார்புரம் பகுதியில் அமைந்துள்ள ராணுவ மைதானத்தில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வி வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்தும், டாஸ்மாக் ஊழலைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

 

அப்போது பேசிய அவர், “தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் 8 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஏழைகளின் முன்னேற்றம் கல்வியை சார்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

 

1 முதல் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில்தான் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது இதில் உள்ள முக்கிய விஷயம். ஆனால், தமிழில் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதை தி.மு.க-வினர் சொல்ல மாட்டார்கள். வரைவு அறிக்கையில் 3-ஆம் மொழியாக கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று இருந்தது.

 

அதனை ஏதாவது ஒரு இந்திய மொழியை 3-வது மொழியாகப் படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மாற்றினார்.மும்மொழிக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கைக்காக கையெழுத்து இயக்கம் தொடங்கி 18 நாட்களில் 26 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இது ஒரு அரசியல் புரட்சி. மே இறுதிக்குள் ஒரு கோடியை எட்ட வேண்டும் என்பதே இலக்கு. தேசிய கல்விக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால், இதை மறைத்து தி.மு.க-வினர் அரசியல் செய்கின்றனர்.

Right Menu Icon