பெண்களுக்கு அடையாள அட்டை..!
மகளிர் சுய உதவிக்குழுவில் இடம்பெற்றுள்ள 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விவரங்களை சேகரிக்கும் பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அடையாள அட்டை வழங்கிய பின், வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும். அதேபோல், அரசின் பல்வேறு நல உதவிகளும், அவ்வப்போது அறிவிக்கப்படும் பலன்களும் சென்றடைய வழி ஏற்படும்.





