--- --:--:-- --

வாரம் ஒரு முறை மருத்துவமனையை நானே ஆய்வு செய்வேன் : முதல்வர்

1

சென்னையில் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளைப் போல, சென்னை கொளத்தூர் பெரியார் நகரில், அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில், 210 கோடி ரூபாய் மதிப்பில் 6 தளங்களுடன், அனைத்து விதமான சிகிச்சை அளிக்கும் வகையில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

 

பெரியார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார். பெரியார் அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க விரைவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

 

மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம்தான் உண்மையான சமூகநீதி என்றார். மேலும், வடசென்னை மக்களின் உயிர்காக்கும் மருத்துவமனையாக பெரியார் மருத்துவமனை இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், குடும்பத்தில் ஒருவரைப் பார்ப்பது போல நோயாளிகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

 

சுய ஒழுக்கம் அனைவருக்கும் முக்கியம், பொது இடங்களில் தூய்மையைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், வாரம் ஒருமுறை பெரியார் அரசு மருத்துவமனைக்குத் தான் ஆய்வுக்குச் செல்வேன் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon