--- --:--:-- --

கிளிசரின் இல்லாமலே நடித்தேன் – லிஜோ ஜோஸ்

7

ஜெய்பீம் படத்தில் பல அழுகை காட்சிகளில் கிளிசரின் பயன்படுத்தாமலேயே தனக்கு கண்ணீர் வந்துவிட்டதாக நடிகை லிஜோ ஜோஸ் தெரிவித்தார். அதிகார வர்க்கம் பாவப்பட்ட மக்களை எப்படி கொடுமைப் படுத்துகிறார்கள் என்பதை ஜெய்பீம் அழகாக காட்டுகிறது.

 

ஜெய்பீம் படத்தில் ஒரு வேடத்தில் மலையாள நடிகையான லிஜோ ஜோஸ் நடித்துள்ளார். உயிரோட்டமுள்ள படத்தின் கதைக்கேற்ப அட்டகாசமாக நடித்து தமிழ் மக்களின் இதயத்தில் இடம்பிடித்துவிட்டார். தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அறிமுகமான லிஜோ ஜோஸ் ஜெய்பீமில் நடித்து முத்திரை பதித்து விட்டார்.

 

இந்த படத்தில் பல காட்சிகளில் கிளிசரின் இல்லாமலேயே தனக்கு அழுகை வந்துவிட்டதாகவும் இப்பொழுதும் ஜெய்பீம் படத்தில் சிறு வேடத்தில் நடித்த படத்திலிருந்து தன்னால் வெளிவர முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இப்போதும் படத்தை பார்க்கும் பொழுது தன்னை அறியாமலேயே அழுகை வந்துவிடுவதாகவும் நீங்கள் படத்தில் பார்ப்பது எல்லாம் தன்னுடைய நிஜ கண்ணீர் தான் என்றும் லிஜோமோல் கூறியுள்ளார்.

Right Menu Icon