--- --:--:-- --

அமித்ஷாவை சந்தித்தேன், செங்கோட்டையன் பற்றி என்னிடம் அவர் எதுவும் சொல்லவில்லை!

1

டெல்லியில் அதிமுக எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், மத்திய அமைச்சர் அமித் ஷா – செங்கோட்டையன் சந்திப்பு குறித்து பேசினார். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் நீக்கி உத்தரவிட்டார்.

 

இதனையடுத்து நேற்று திடீரென செங்கோட்டையன் டெல்லிக்கு புறப்பட்டார். அவர் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் அதற்கு மறுப்பு தெரிவித்து, “ராமரை பார்க்க ஹர்த்வார் செல்கிறேன்” எனக் கூறிவிட்டுச் சென்றார்.

 

அதனையடுத்து நேற்று இரவு திடீரென அவர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதனையடுத்து இன்று தமிழ்நாடு திரும்பிய நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கட்சி வலிமை பெறுவது, ஒருங்கிணைப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தேன்” எனத் தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து டெல்லியில் அதிமுக எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், மத்திய அமைச்சர் அமித் ஷா – செங்கோட்டையன் சந்திப்பு குறித்து பேசினார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “இன்று கூட நாடாளுமன்றத்தில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினேன். அப்பொழுது கூட செங்கோட்டையன் உடன் அவர் சந்திப்பு குறித்து என்னிடம் எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை. நானும் எதுவும் கேட்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon