தயாரிப்பு பணியில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு நான் பொறுப்பல்ல..!
இந்தியன் 2 படத்தின் தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமே காரணம் என்று உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். இந்தியன் டூ படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த வழக்கு விசாரணையின் பதிலளித்துள்ள சங்கர் இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் கமல்ஹாசனுக்கு முதலில் மேக்கப் அலர்ஜி ஏற்பட்டது. அதன் பின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து ஆகியவற்றிலேயே படப்பிடிப்பு தாமதமானது.
மேலும் படத்தின் தயாரிப்பு செலவு 150 கோடியாக குறைந்த போதும் லைக்கா நிறுவனம் கடைபிடிப்பதை தொடங்குவதில் தாமதம் ஏற்படுத்தியது. இதனால் பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு தான் பொறுப்பல்ல என்று கூறியுள்ளார்.
எனவே லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.






