--- --:--:-- --

ஜெயலலிதா ஆட்சியை அமைக்க இங்கே இணைகிறேன் : அதிகாரபூர்வமாக அறிவித்த டி.டி.வி

8

என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் அ.தி.மு.க இணைந்தது குறித்து அதிருப்தி தெரிவித்து கூட்டணியில் இருந்து விலகிய, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், எங்களுக்குள் பங்காளி சண்டை, விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

 

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.கவுடன் என்.டி.ஏ கூட்டணியில் இருந்த அதிமுக, நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட நிலையில், தற்போது மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளது. அதேபோல், அன்புமணி தலைமையிலான பா.ம.க கட்சியும் என்.டி,ஏ கூட்டணியில் இணைந்துள்ளது.

 

அதே சமயம் கூட்டணியில் அ.தி.மு.க இணைந்தவுடன் அதிருப்தியில் கூட்டணயில் இருந்து பிரிந்து சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் மீண்டும் கூட்டணியில் இணையுமாறு பா.ஜ.க. பிரபலங்கள் பலரும் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனிடையெ செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், நான் கூட்டணிக்கு வருவதாக ஒரு கட்சிக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். அதை அவர்கள் தான் அறிவிக்க வேண்டும். அதற்குள் நான் அறிவித்தால் அது நன்றாக இருக்காது என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில், தற்போது டிடிவி தினகரன் தற்போது மீண்டும் அ.தி.மு.க.- பா.ஜ.க என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளார். இதற்காக தமிழக சட்டசபை தேர்தலின் பா.ஜ.க பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திதிக்க உள்ளார் கூட்டணியில் இணைவது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்

 

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.டி.வி தினகரன், தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதற்க்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம். எங்களுக்குள் பங்காளி சண்டை தான், விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை, பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டு கட்சி மற்றும் தமிழ்நாட்டு நலனை பின்னுக்கு தள்ளி விடக்கூடாது, ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமர்த்துவதற்கு தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon