--- --:--:-- --

எழக் கூட முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறேன் : சிவாங்கி

5

குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்கேற்று வந்த சிவாங்கி குக் வித் கோமாளி சீசன் 4ல் குக்காக பங்கு பெற்று அசத்தி வருகிறார். சிவாங்கி சிங்கராக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலமே மக்கள் மத்தியில் பிரபலமானார்.

 

இந்நிலையில் சிவாங்கி தற்பொழுது தனக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனக்கு இரண்டு நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் என்றும் தன்னால் எழக்கூட முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

 

மேலும் ரசிகர்களிடமிருந்து தனக்கு கிடைத்த அன்பு தன்னை மீண்டும் எழ வைத்துவிட்டது என்றும் தங்கள் அன்பு இல்லாமல் நான் ஒன்றுமே இல்லை எனவும் சிவாங்கி பதிவிட்டுள்ளார்.

 

Right Menu Icon