5 ஆண்டுகளில் சுந்தர் பிச்சை வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..?
ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவாக உள்ள சுந்தர் பிச்சைக்கு இதுவரை 80,000 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப் பட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் அமெரிக்காவின் அதிக சம்பளம் பெரும் டெக் நிறுவன சிஇஓக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஜூகர்பெர்க், இந்திய மதிப்பில் 4.17 லட்சம் கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். 2012 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பங்குகள் மற்றும் பணமாக இந்த தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதலில் கூகுள் அதனைத் தொடர்ந்து அதன் ஆரம்ப நிறுவனமான ஆல்பபெட் ஆகியவற்றின் சிஇஓவாக இருக்கும் சுந்தர் பிச்சை 80 ஆயிரம் கோடியை சம்பளமாக பெற்று இருக்கிறார். 2015 முதல் 2020 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு பங்குகள், இழப்பீடுகள் பணம் என இந்த தொகை சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது.







