--- --:--:-- --

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும்..!

2

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும் என அந்த மாகாண சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

 

கொரொனா பரவலைத் தடுக்க ஒரே வழி தடுப்பூசிகள் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வரும் சூழலில் கொரொனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள தயங்குகின்றனர்.

 

பஞ்சாபில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் முதல் டோசை போட்டுக்கொண்ட சுமார் 3 லட்சம் பேர் இரண்டாம் டோசை போட்டுக்கொள்ள வரவில்லை என்று கூறப்படுகிறது.

 

இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வராதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு தடாலடியாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon