--- --:--:-- --

அடுத்த சில தினங்களுக்கு அனல் காற்று வீசும்..!

4

மிழகத்தில் நேற்று 10 இடங்களில் சதம் அடித்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு அனல் காற்று வீசுவது தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 27 மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வேலூரில் அதிகபட்சமாக 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக பெற்றுள்ளதுடன் வானிலை மையம் கூறியுள்ளது.

 

வெப்பச்சலனம் காரணமாக மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொருத்தவரை இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 107 டிகிரி பாரன்ஹீட் ஆகவும், நுங்கம்பாக்கத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon