--- --:--:-- --

வெளி மாநிலத்தவருக்கு உணவு, தங்குமிடம் வசதி செய்ய வேண்டும்..! மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு!!

gf

ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை அல்லாட விடாமல் அவர்களுக்கு உரிய தங்குமிடம், உணவு வசதிகளை செய்து தர மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு திடீரென பிறப்பிக்கப்பட்டது. 21 நாட்களுக்கு ஊரடங்கு என்ற அறிவிப்பால், பல்வேறு மாநிலங்களிலும் தினக்கூலிகளாக, கட்டுமான தொழிலாளர்களாக, சிறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களாக பணிபுரியும் வெளி மாநிலத்தவர்களின் நிலைமை பரிதாபமாகிவிட்டது.

போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களக்கு திரும்ப முடியாத சூழல் உருவானது. கால்நடையாகவாவது சென்று விடுவோம் என பல நூறு கி.மீ. தூரத்துக்கு குடும்பத்துடன் மூட்டை முடிச்சுகளுடன் பனடயெடுத்தாலும், மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

 

இந்தப் பிரச்னை அனைத்து மாநிலங்களிலுமே எழுந்து பூதாகரமாக வெடிக்கும் சூழல் உருவான நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மாநிலங்களுக்கும் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் வெளியேற முடியாமல் தவிக்கும் வெளி மாநிலத்தவர் யாரையும் வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபடாமல் அவர்களுக்கு உணவு, தங்குமிடம் வசதிகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் செய்து தர வேண்டும் என அமித் ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon