பாராளுமன்றத்தில் நேருக்கு நேர் மோடியை காரி உமிழ்ந்த ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்பி விப்லாவ் தாக்கூர்
ஐ.ஐ.டி யார் கொண்டு வந்தது? எய்ம்ஸ் யார் கொண்டு வந்தது? ஆறு வருடங்களாக நீங்கள் செய்ததெல்லாம் காங்கிரஸின் பழைய திட்டங்களுக்கு புதிதாக பெயிண்ட் அடித்து உங்களுடைய திட்டம் என்று நாட்டு மக்களை ஏமாற்றியதை தவிர என்ன செய்தீர்கள்? எழுபது வருடங்களாக காங்கிரஸ் கூட இவ்வளவு முறை பாகிஸ்தான் பெயரை சொல்லவில்லை, நீங்கள் அடிக்கொரு முறை பாகிஸ்தான் பெயரில் அரசியல் செய்கிறீர்கள்.
பாகிஸ்தானில் யாரும் அழைக்காமலே ஓசி பிரியாணி தின்றுவிட்டு வந்தது யார்? நீங்களா காங்கிரஸ்காரர்களா? என்ன செய்து இருக்கிறீர்கள் நீங்கள்? பாகிஸ்தானை பகைச்சாச்சு. சீனாவை புரிந்துக் கொள்ள கூட இல்லை, வங்காளத்தில் உறவை இழந்து விட்டீர்கள்? நேபாளமும் நம் பேச்சை மதிப்பதில்லை. இந்த நாட்டை துண்டாக்க முயல்வதை தவிர என்ன திட்டம் உங்களிடம் இருக்கிறது? போய் பாருங்கள் நாடு முழுக்க மக்கள் தேசிய கொடியேந்தி போராடி வருகிறார்கள்.

படித்து பட்டம் பெற்றவர்கள், வேலைக்கு எங்கே போவார்கள்? அவர்களுக்கு உங்களிடம் திட்டம் ஏதாவது இருக்கிறதா? பெண்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்களா? இந்த நாட்டை சுதந்தர நாடாக்க அன்று லத்தியால் அடி வாங்கினோம்.
அதே காரணத்துக்காக இன்று போராடினால் துப்பாக்கியும் ரிவால்வரும் கொண்டு அச்சுறுத்தி வருகிறீர்கள். மூடிட்டு உட்காருங்கள். ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்பி விப்லாவ் தாக்கூர் பாராளுமன்றத்தில் நேருக்கு நேராக மோடியை கிழித்து தொங்க விட்டுள்ளார்.






