செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்..!
செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவில் நாசா அனுப்பி வைத்திருக்கும் ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறந்ததையடுத்து விண்வெளித்துறையில் அமெரிக்கா மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சிவரன்ஸை அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.
மேலும் மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்று அனுப்பப்பட்டது. ஹெலிகாப்டரில் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்ததாக நாசா அறிவித்துள்ளது.
இதன் மூலம் பூமியை தவிர மற்றொரு கிரகத்தில் முதன்முதலாக ஹெலிகாப்டரை பறக்கவிட்டு மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது.






