குமரி மாவட்டத்தில் பெய்த சாரல் மழை !
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. அதுபோல குழித்துறை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. திடீரென பெய்த மழையால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் இன்று மகிழ்ச்சி அடைந்தனர்.







