--- --:--:-- --

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

Rajendra balaji 01

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி சத்திய நாராயணனும், வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதில் எவ்வித பயனும் இல்லையென்று நீதிபதி ஹேமலதாவும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.

 

தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை, அமைச்சர் பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ. 7 கோடிக்கும் மேல் சேர்த்ததாக, ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுதித்திருந்தார்.

 

இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தலாம் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறவில்லை. இதையடுத்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மகேந்திரன் தொடர்ந்தார். இவ்வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கி உள்ளனர். அமைச்சர் மீது வழக்குப் பதிவுசெய்து ஆளுநரிடம் உரிய ஒப்புதல் பெற்று விசாரிக்க வேண்டும் என்று, நீதிபதி சத்தியா நாராயணன் தீர்ப்பளித்துள்ளார். ஆனால், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதால் பயனில்லை என்று, நீதிபதி ஹேமலதா தெரிவித்துள்ளனர்.

 

எனவே, தலைமை நீதிபதியின் நடவடிக்கைக்காகவும், 3வது நீதிபதியை நியமிக்கும் வகையிலும், வழக்கு ஆவணங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon