நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதா..?
யூடியூபில் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு வேறொரு வழக்கில் பிணை வழங்கிய சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலின மக்கள் தொடர்பாக அவதூறான வகையில் பேசி யூடியூபில் வீடியோ வெளியிட்டதால் சர்ச்சை எழுந்ததில் நடிகை மீராவை துணை காவல் துறையினர் கடந்த 14ஆம் தேதி கைது செய்தனர். தற்போது சிறையில் இருக்கும் அவரை இன்று மேலும் ஒரு வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக மீராமிதுன் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் கைது செய்த போலீசார் அவரை சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் நிறுத்தினர்.
இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்குமாறு மீராமிதுன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சாதிய வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்படவில்லை. இதனால் மீண்டும் மீரா மிதுனை போலீசார் சிறையில் அடைத்தனர்.







