25 காசுக்கு விற்கப்பட்ட அரை பிளேட் பிரியாணி!
வேலூரில் பழைய 25 காசு நாணயத்திற்கு அரை பிளேட் பிரியாணி வழங்கப்படுமென விளம்பரம் செய்யப்பட்ட கடையினுள் பொதுமக்கள் திரண்டனர். ஆரணி சாலையில் புதிதாக தொடங்கப்பட்ட பிரியாணி கடையில் 25 காசுக்கு அரை பிளேட் பிரியாணி விற்கப்படும் என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதனை அறிந்து கொண்ட பொதுமக்கள் பிரியாணி கடைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அவர்களில் முதலில் வந்த 200 பேருக்கு மட்டும் 25 காசுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.






