மூதாட்டிக்கு கொரொனா தொற்று உறுதியானதல் வேலை இழந்த பேத்தி..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கொரொனாவில் இருந்து மீண்டு வந்தார். 103 வயது மூதாட்டி ஒருவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார். ஆம்பூர் அடுத்த பெரிய பாளையத்தில் வசித்து வரும் மூதாட்டிக்கு கடந்த ஒன்றாம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. கொரொனா பரிசோதனை செய்ததில் கொரொனா தொற்று உறுதியானது தெரிய வந்தது.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே மூதாட்டிக்கு கொரொனா ஏற்பட்டதால் இவரது மகள் மற்றும் பேத்தி தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
ஆனால், பின்னர் பேத்தி வேலை செய்திருந்த காலணி தொழிற்சாலையில் வலம் வரவேண்டும் எனக் கூறி விட்டதால் வேலையை இழந்துள்ளார். இதனால் அவரை நம்பி இருக்கும் தாய் மற்றும் பாட்டி தற்போது உணவுக்குத் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு உதவ வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் அரிசி, பருப்பு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.






