திருவள்ளுவர் தினம் கொண்டாடிய ஆளுநர்..!
திருவள்ளுவர் தினத்தை இன்று கொண்டாடுவதாக தமிழக ஆளுநர் ரவி அறிவித்திருந்த நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார்.
திருவள்ளுவர் பிறந்ததாக கூறப்படும் நிலையில் இன்றைய தினம் திருவள்ளுவர் தினத்தை கொண்டாட உள்ளதாக சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அறிவித்து அழைப்பிதழ் வெளியிட்டது. இதனை ஒட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் ரவி தரிசனம் செய்தார்.
பின்னர் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவரின் திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு ஆளுநர் ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். காவி ஆடையுடன் திருவள்ளுவர் படம் ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்தது.





