--- --:--:-- --

தமிழகத்தில் நாளை பேருந்து, ஆட்டோ ஓடாது என தமிழக அரசு அறிவிப்பு..!

7

மிழகத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் பேருந்து, ஆட்டோ, மெட்ரோ, ரயில்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் நாளை அதிகாலை 5 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை சென்ட்ரல் எழும்பூரில் இருந்து பகல் நேரங்களில் செல்லக்கூடிய ரயில்களும் இரவு நேரங்களில் புறப்பட கூடிய ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் என கூறப்படுகிறது.

 

சென்னையில் மாநகர பேருந்துகள் நாளை முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும், ஆட்டோக்கள் ஓடுவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், மக்களை ஏற்றிச் செல்லக்கூடிய எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் மின்சார ரயில்கள் 50 சதவீதம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon