அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு..!
சிதம்பரம் ராஜாமுத்தையா மற்றும் ஈரோடு ஐஆர்டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு கல்லூரிகள் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டாலும் இந்த இரு கல்லூரிகளிலும் தனியார் போன்று கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரியில் 5 லட்சத்து 44 ஆயிரமும், ஈரோடு ஐஆர்டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் 3 லட்சத்து 85 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை 2 லட்சத்திலிருந்து 8 லட்சமாக உயர்த்த ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.






