--- --:--:-- --

மனைவியின் மரணத்தால் கலங்கி நிற்கும் கவுண்டமணி..!

3

திரைப்படங்களில் காதலர்களுக்கு உதவும் வேடங்களில் நடித்து பாராட்டு பெற்ற கவுண்டமணி, நிஜத்தில் காதல் திருமணம் செய்து கொண்டவர். மனைவி பெயர் சாந்தி. இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். கவுண்டமணி மனைவி உடல் தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

1971-ம் ஆண்டு வெளியான ‘தேனும் பாலும்’ படத்தில் சுப்பிரமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கவுண்டமணி. குறிப்பாக கவுண்டமணி – சத்யராஜ் மற்றும் கவுண்டமணி – செந்தில் காம்போ படங்களில் இடம்பெற்ற காமெடிகள் என்று பார்த்தாலும் சிரிக்கவைக்கக் கூடியவை.

 

இந்நிலையில் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 10.30 மணி அளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்தில் அவரது மனைவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

தனது நண்பரின் மனைவி இறந்ததை அறிந்த சத்யராஜ், உடனடியாக நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி, கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினார். இதேபோல், நடிகர் செந்திலும் இந்தச் செய்தி அறிந்ததும், உடனடியாக கவுண்டமணி இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவிக்கு அஞ்சலி செலுத்தினார். பின் கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினார்.

Right Menu Icon