சென்னையில் உணவு டெலிவரி இளைஞரை சம்பவம் செய்த கூகுள் மேப்..!
துரைப்பாக்கத்தில் google map உதவியுடன் உணவு டெலிவரி செய்ய சென்ற இளைஞர் சதுப்பு நிலத்தில் சிக்கி கொண்டதால் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11.20 மணியளவில் துறைப்பாக்கத்தில் உள்ள வீட்டில் உணவு டெலிவரி செய்வதற்காக சென்று உள்ளார்.
google map உதவியுடன் அவர் டெலிவரி செய்ய சென்ற நிலையில் அங்குள்ள சதுப்பு நிலத்தில் சிக்கிக்கொண்டார். தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் பைக்கையும் நீண்ட நேரம் பின்னர் அவர்கள் தண்ணீர் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.






