ஒடிசா மாநிலத்தில் அரிதினும் அரிதாக காணப்படும் தங்க நிற ஆமை..!
ஒடிசா மாநிலத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அரிதினும் அரிதான தங்கநிற ஆமை மீட்கப்பட்டுள்ளது. பாலசூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதில் சுஜன்பூர் என்ற இடத்தில் மழை நீரில் தங்க நிற ஆமை ஒன்று அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதனைப் பிடித்து அதிசயமாக பார்வையிட்டனர். தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் ஆமையை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மெலனின் என்ற நிறமி இழப்பால் உயிரினங்கள் அல்பினோ என்ற வெள்ளை நிறமாக மாறும் என்று தெரிவித்த அவர்கள் ஆனால் ஆமை மஞ்சள் நிறமாக மாறியதன் காரணம் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.






