தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா வங்கி கணக்கில் ரூ.38 கோடி..!
கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா தனியார் வங்கியில் 38 கோடி ரூபாய் டெபாசிட் செய்து இருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஷோபனாவின் வங்கி லாக்கர்களில் திறந்து சோதனை செய்தபோது அதில் கோடிக்கணக்கில் பணமும் நகைகளும் இருந்தன.
இந்த நிலையில் மற்றொரு தனியார் வங்கியில் 38 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. ஸ்வப்னாவின் கணக்குக்கு மேலும் சிலரிடம் இருந்து பணம் வந்துள்ளது .
மேலும் அந்த வங்கியின் தான் ஐக்கிய அரபு துணை தூதரகத்தின் பழக்கம் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தனியார் வங்கியில் மேனேஜருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.







