--- --:--:-- --

மீண்டும் அதிரடி சரிவில் தங்கம் விலை..!

1

மார்ச் மாதம் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டு அதிரடியாக உயர்ந்தது. அதே போல தான் ஏப்ரல் மாதத்தின் முதல் நாளும் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்தது. தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கும் தங்கம் விலை கடைசியாக நேற்று முன் தினம் அதிரடி காட்டியது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து வார தொடக்க தினமான இன்று ( ஏப்ரல் 6) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.13,810க்கும் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.11,520க்கும் சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.92,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon