--- --:--:-- --

மீண்டும் எகிறியது தங்கம் விலை..!

4

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்தது. பிறகு நடுவில் தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதியான இன்றே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,670க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.380 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,050க்கும் சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.250 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,710க்கும் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும், கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon