வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை..!
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரவே சாமானிய மக்களுக்கு நகை என்பது எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.இனி தங்கம் விலை ரூ.60,000க்கும் கீழ் குறையவே குறையாது என்ற நிலைக்கு வந்துவிட்டது.
வரலாற்றிலேயே முதன்முறையாக பிப் 11ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,000த்தை தாண்டியது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,030க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,040க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6630க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,040க்கும், விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.108க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





