அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!
நவம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை இறங்கு முகத்தில் இருப்பது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் நவம்பர் 15ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.11,550க்கும் சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு சவரன் ரூ.92,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வார தொடக்கமான இன்றும் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.92,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.9,625க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.173க்கும் ஒரு கிலோ ரூ.1,73,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





