--- --:--:-- --

ஞானவாபி மசூதி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

1

த்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என வாரணாசி நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம், நந்தி, தாமரை உள்ளிட்ட இந்து ஆலய அடையாளங்கள் உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் ஆய்வு குழு அமைத்தது. இந்த குழுவின் தகவல்கள் கசிந்தன. புகார் வந்ததால் குழுவின் தலைவர் மாற்றப்பட்டார்.

 

ஞானவாபி மசூதி வழக்கில் புதிய குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த நிலையில் பழைய குழுவின் தலைவரும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பொது விசாரணைக்கு வந்தபோது விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர் மனுதாரர் கோரினார்.

 

எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் புகார் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற வளாகத்தில் வைத்தால் வாரணாசி நீதிமன்ற வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க உள்ளதாகவும் அதுவரை வாரணாசி நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டு விசாரணையை இன்று 3 மணிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

 

Right Menu Icon