நடுரோட்டில் கேக் வெட்டிய கேர்ள்ஸ்..! போலீசை பார்த்து ஓட்டம்!
கொரொனாவால் அமெரிக்க காரர்கள் அரண்டு கிடக்கின்றனர், இத்தாலிகாரர்கள் இருண்டு கிடக்கின்றனர். அதனைப் பரப்பிய சீனாக்காரர்கள் சின்னாபின்னமாகி இப்பொழுதுதான் ஒரு நிலைக்கு வந்துள்ளனர். இந்தியாவில் ஊரடங்கால் நாடே தவித்துக் கிடக்கிறது. ஆனால் கொரொனாவால் பெரிய அளவில் உயிரிழப்புகள் எதுவும் நிகழ்ந்து விடாமல் தடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டைப் பற்றி மட்டுமல்ல, வீட்டைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் சுற்றித் திரிந்த 3 சிம்ரன்ஸ்சை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் சென்டர் மீடியன் அருகே கூடினர். தாங்கள் கையோடு எடுத்து வைத்து இருந்த கேக்கை அங்கு வைத்து வெட்டி அவர்கள் ஒருவர் முகத்தில் ஒருவர் மாறி மாறி சந்தனம் போல பூசி கொண்டாடினர்.

ஆளில்லா சாலை அந்த இளம் பெண்களின் அளப்பறையால் களைகட்டியது. இதனை கண்ட ரோந்து போலீசார் அவர்களை மடக்கி என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம் என்ற ரீதியில் விசாரிக்க ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் போல அங்கேயே பம்மினர். போலீசார் எச்சரித்ததும் மூன்று பேரும் அங்கிருந்து விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர்.
கொரொனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வீட்டில் தனித்து இருந்தால் மட்டுமே கொரொனா தொற்றை விரட்ட முடியும். ஆணுக்கு பெண் சமம் என்பதில் எவருக்கும் இங்கே மாற்றுக்கருத்து இல்லை.

அதற்காக ஊர் சுற்றி புள்ளிங்கோ போல பொறுப்பின்றி சுற்றுவதால் எந்த பயனும் விளைந்து விடப் போவதில்லை என்று சுட்டிக்காட்டும் போலீசார் இப்படியே வீதியில் சுற்றி கேக் வெட்டி கொண்டாடினால் வீட்டில் உள்ளோருக்கு தான் பிறந்த நாள் பரிசாக கொரொனாவை வாங்கி செல்ல நேரிடும் என்று எச்சரிக்கின்றனர்.







