--- --:--:-- --

டிக் டாக்கில் பிரபலமாக இருந்த ஜிபி முத்து விஷம் அருந்தி தற்கொலை..!

4.1

ப்போதும் டிக்டாக்கிலேயே மூழ்கிக் கிடந்த டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வெங்கடாசலபதி சேர்ந்தவர் ஜி பி முத்து.

 

நாசக்கார சீன செயலியான டிக்டாக்கில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர் ஆவார். டிக்டாக்கில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த அளவுக்கு இவர் பிரபலம். மரக் கடை வைத்திருந்த ஜி பி முத்து கடை வேலையை கூட பார்க்காமல் எப்போதும் டிக் டாக்கே கதியென்று கிடந்தார்.

 

அதனால் போதிய வருமானம் இல்லாததால் அவரது வீட்டில் பிரச்சனை ஏற்பட்டது. எந்த நேரமும் டிக் டாக்கிலே நேரத்தை கழித்ததால் முத்துவின் மனைவியும் குழந்தைகளும் அவரை வெறுக்க தொடங்கினர். இது பற்றி அவரே வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

 

இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜிபி முத்துவை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

அங்கே தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon