--- --:--:-- --

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

9

துவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ அறிவிப்புவிழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் மாவட்ட அதிகாரிகளுக்கு 2026 குடியரசு தினத்தன்று விருது வழங்கப்பட உள்ளது.

 

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் (Prohibition Enforcement Wing – PEW) சிறப்பாகப் பணியாற்றி, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் கடத்தலைத் தடுத்த ஐந்து காவல் அதிகாரிகளுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய ஐந்து காவல் அதிகாரிகளுக்கு, 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் வழங்கப்படும். விருது பெறும் ஒவ்வொரு காவலருக்கும் ஒரு தங்கப் பதக்கமும் (8 கிராம்) ரூ.10,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Right Menu Icon