--- --:--:-- --

ரோட்டில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் நாட்டவர்! போலீஸ் விசாரணை!

8

சென்னை அடுத்த பூந்தமல்லியில் சாலையில் சுற்றி திரிந்த 3 வெளிநாட்டவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வெளிநாட்டைச் சேர்ந்த மூவர் பூந்தமல்லியில் சுற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது. அதனடிப்படையில் பூந்தமல்லி வட்டாட்சியர் காந்திமதி மற்றும் காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

 

அதில் மூவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் எங்கு தங்கியுள்ளனர்? எதற்காக தமிழகம் வந்துள்ளனர்? ஆகியவை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon