சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம்..!
சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம்.
வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்க உள்ளார்.
தையொட்டி இன்று மதியம் 2 மணியிலிருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்ய நிர்வாகம் அனுமதித்துள்ளது. விமான நிலையம் திருவொற்றியூர் விம்கோ நகர் பரங்கிமலை சென்றடைய மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.






