கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்..!
2025 – 2026ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது எந்தெந்தப் பாடப்பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட இருக்கிறது எனும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, 20 லட்சம் மடிக்கணினிகளைக் கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, இதற்கான முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆன்லைன் டெண்டர் கோருவதற்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (25.06.2025) இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கக் கூட்டம் வரும் மே 28ஆம் தேதியும், ஜூன் 6ஆம் தேதியும் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்லூரி மாணவர்களுக்கு, 8 ஜிபி RAM, 256 GB SSD கொண்ட Hard disk, 14 அல்லது 15.6 இன்ச் திரை ஆகிய செயல் திறன் கொண்ட வகையாக இந்த மடிக்கணினி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், எந்தெந்தப் பாடப்பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவுள்ளது எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கு ஓராண்டு உத்தரவாதச் சான்றும், மூன்று ஆண்டுகளுக்குச் சேவை சார்ந்த ஆதரவும் அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





