அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மொழி காலமானார்..!
மேல்மலையனூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மொழி ராஜதத்தன் உடல் நலக்குறைவால் காலமானார்.
2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் சென்றவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தமிழ்மொழி ராஜதத்தன் மறைவுக்கு அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






