அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!
வானிலை அறிவிப்பின்படி தமிழ்நாட்டின் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
வேலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் சில மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.4





