ராஜஸ்தானில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம்..!
ராஜஸ்தானில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஜோத்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தெருக்கள் மற்றும் சாலைகளில் ஆறு போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.





