ஃபிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களை தடை செய்க
இணையவழி வணிகத்தை தடை செய்யக்கோரி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இணையவழி விற்பனையால் சில்லரை வியாபாரிகள், பலசரக்கு பொருட்கள் விற்பனையாளர்கள் உட்பட பலரும் பாதிக்கப்படுவதாக கூறி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
இதேபோல மயிலாடுதுறையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் தடைசெய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சிறுவியாபாரிகள் கலந்து கொண்டனர்.





