--- --:--:-- --

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஐந்து இளைஞர்கள்..!

1

திருச்சி மாவட்டத்தில் 5 இளைஞர்கள் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்தாண்டு அவரது உறவுக்கார இளைஞர் தைலக்காட்டுக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

 

அப்பொழுது சிறுமிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து ரங்கநாதன் மற்றும் அவரது நண்பர்களான மணிகண்டன் கணேஷ் உட்பட ஐந்து பேர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அதனை செல்போனில் வீடியோவாகவும் படம் எடுத்து வரட்டி வெவ்வேறு இடங்களில் மூன்று முறை பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் சிறுமிக்கு அவரது பெற்றோர் வேறொரு இளைஞருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவலர்கள் சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

 

சிறுக்மிகு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் அதில் ஒருவர் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Right Menu Icon